வேலை இழந்ததால் மன நலம் பாதிக்கப்பட்ட இந்தியர்
துபாய்: சவூதி அரேபியாவில் மேனேஜராக பணியாற்றி வந்த பெங்களூரைச் சேர்ந்த இந்தியர், வேலையை இழந்த வேதனையில் மன நலம் பாதிக்கப்பட்டார். அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த அந்த இந்தியர் (24) சவூதி அரேபியாவின் தமாம் நகரில் உள்ள ஆளெடுக்கும் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்தார். ஒரு வருடமாக வேலை பார்த்து வந்த இந்த வேலையை விட்டு திடீரென அவர் நீக்கப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஹ்ரைன் தலைநகர் மனாமாவுக்கு வந்தார். அங்கு தங்கியிருந்த அவருக்கு திடீரென மன நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பஹ்ரைனில் உள்ள மன நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை இதே நிலையில் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என விமான நிறுவனங்கள் மறுத்து விட்டதால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகிறது.
அந்த இந்தியருக்கு இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிகள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications