மும்பை- கட்டடம் இடிந்து பெண் பலி, இடிபாடுகளில் பலர்
மும்பை: மும்பையில் கட்டடம் இடிந்து விழுந்து இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
தெற்கு மத்திய மும்பையின் பைகுல்லா பகுதியில் உள்ள ஓரடுக்கு மாடி கட்டடம் இன்று காலை 5 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. தகவலறிந்து போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இடிபாட்டில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்து 20 வயது மதிக்கத்தக்க பெண்ணை மீட்டனர். படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
கடந்த ஒரு மாதமாக மும்பையில் மழை பெய்து வருகிறது. கடந்த ஆறு நாட்களில் 3 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் இரண்டு சம்பவங்கள் தெற்கு மத்திய மும்பை பகுதியில் நிகழ்ந்தவையாகும். இதில் 22 பேர் பரிதாபமாக பலியாயினர்.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் வாழ லாயக்கற்றது, எப்போது வேண்டுமானாலும் இடியும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தனை சம்பவங்கள் நடந்தும் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான இடம் ஒதுக்கப்படவில்லை. மக்களும் வெளியேறாமல் உள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications