ஜோதிட விபரீதம்-6 வயது மகனை கொன்ற தந்தை
ஓட்டப்பிடாரம்: மகன் பிறந்த நேரம் சரியில்லை என ஜோதிடர் ஒருவர் கூறியதை நம்பி, தனது 6 வயது மகனை கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன். கட்டிட தொழிலாளி. இவரது மகன் காளிராஜ் (6). ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த இரண்டு தினங்களுக்கு பின்புறம் வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்த காளிராஜ் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் காளிராஜ் உடல் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்த காளிராஜின் தாய் பேச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவலறிந்த ஒட்டபிடாரம் போலீசார் காளிராஜின் தந்தை அன்பழகன், தாய் பேச்சியம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அன்பழகன் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மகனை தானே கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்ததாக அன்பழகன் ஒப்புக் கொண்டார். விசாரணையில் அவர் கூறியதாவது: எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. கடந்த வாரம் ஜோதிடம் பார்த்தபோது, உன் மகன் பிறந்த நேரம் சரியில்லை. குடும்பத்தில் அதிக கஷ்டம் ஏற்படும். குடும்பத்துக்கும் ஆகாது என்று ஜோதிடர் கூறினார். அதனால்தான் மகனை கொலை செய்தேன் என்றார்.
இதையடுத்து அன்பழகனை போலீசார் கைது செய்தனர். அவர் குறிப்பிட்ட அந்த ஜோதிடரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications