முஷாரப்பை கொல்ல அல்கொய்தா-தலிபான்கள் தீவிரம்

நேற்று முஷாரப் பதவி விலகியதை பாகிஸ்தான்-ஆப்கான் எல்லைப் பகுதியில் தலிபான்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந் நிலையில் முஷாரப்பை காலி செய்ய அல் கொய்தாவும் தலிபான்களும் உறுதிமொழி எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவியில் இருந்தபோது 9 முறை அவரை குண்டு வைத்துக் கொல்ல முயற்சிகள் நடந்தன. ஆனால், முஷாரப் தப்பிவிட்டார்.
இப்போது பதவி போய்விட்ட நிலையில் பாதுகாப்பு குறையும் நிலை உள்ளதால் முஷாரப்பின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லால் மஸ்ஜித்தில் தீவிரவாதிகள் வேட்டை என்ற பெயரில் ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில் பல சிறார்கள் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் பலியாயினர்.
அதற்கு பழிக்குப் பழியாக முஷாரப்பை தேடிப் பிடித்து கொன்று நரகத்துக்கு அனுப்ப வேண்டும் என லால் மஸ்ஜித் மசூதியின் தலைமை நிர்வாகியான மெளலானா மெஹ்ராஜ் கூறியுள்ளார்.
அதே போல தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் மெளல்வி உமர் கூறுகையில், அமெரிக்காவுக்கு உதவிய முஷாரப்புக்கு மிகக் கடுமையான தண்டனை தரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஜாமியா முகமிதா மதரஸாவின் தலைவரான மெளலானா அமீர் கூறுகையில், முஷாரப் பலரை கொன்று குவித்துள்ளார். இதனால் அவரைக் கொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications