தமிழகத்திற்கு சொந்தமானது ஒகனேக்கல்-திரிபாதி
சென்னை: தமிழகத்திற்குட்பட்ட பகுதிதான் ஒகனேக்கல். இதில் தேவையில்லாமல் சில அரசியல் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றன என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரிபாதி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒகனேக்கல் பகுதி, தமிழகத்துக்கே சொந்தம். இதனை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டியது என் கடமை. இதில் சந்தேகத்துக்கே இடமில்லை. இதற்கான ஆதாரங்கள் நம்மிடம் தெளிவாக உள்ளன.
ஒகனேக்கல் குடிநீர்த் திட்டம் அவசர கதியில் நிறைவேற்றப்படவில்லை. தமிழக பகுதியில் ஓடும் காவிரி நதியில் இருந்து 1.4 டி.எம்.சி. நீரை எடுத்து இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் 30 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சில பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தை தேவைக்கு அதிகமாக ஊதி பெரிதாக்குகிறார்கள். திட்டமிட்டபடி ஒகனேக்கல் குடிநீர்த் திட்டம் குறித்த காலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.
இந்த திட்டத்துக்கு ஜப்பான் நிதி உதவி அளித்திருப்பதன் மூலம், இருநாடுகளுக்கு இடையிலான உறவு நன்கு பலப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரெயில் திட்டத்துக்கும் ஜப்பான் நிதி உதவி செய்கிறது. அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் திரிபாதி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications