தேனி- கழுதை மூலம் ரேஷன் அரிசி கடத்தல்!

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டத்தில் நூதனமான முறையில் கழுதைகள் மூலம் கடத்திய ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து அரிசியை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரூ.2க்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை சிலர் சட்ட விரோதமாக வெளி மாநிலங்களுக்கு கடத்தி வருகின்றனர். பஸ் மற்றும் ரயில்களில் கடத்தப்படும் ரேஷன் அரிசியை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர். என்றாலும் அரிசி கடத்தல் தொடர்ந்து நடக்கிறது.

பஸ், லாரி, ரயில் என்று எதில் கடத்தினாலும் போலீஸார் பிடித்து விடுவதால், புதிய முறையை கையாண்டுள்ளனர் தேனி மாவட்ட அரிசி கடத்தல்காரர்கள். அழுக்கு மூட்டைகளை சுமக்கும் கழுதையின் (!) மீது வைத்து அரிசியை கடத்த முயன்றுள்ளனர் கடத்தல்காரர்கள், அதுவும் கேரளாவுக்கு.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து சென்று கழுதைகள் மூலம் கடத்தப்பட இருந்த 19 மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றினர். அதிகாரிளை கண்ட கடத்தல் பேர்வழிகள் எஸ்கேப் ஆகிவிட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+