காஷ்மீர் பகுதியில் பாக்ஸ்தானின் தொடரும் அத்துமீறல்
ஜம்மு: காஷ்மீரின் நவ்ஷெரா பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் இன்று காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய எல்லையில் தாக்குதல் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக எல்லையில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் நவ்ஷெரா பகுதியில் பாகிஸ்தான் படையினர் திடீரென மார்ட்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். காலை 6.40 மணிக்குத் தொடங்கிய இந்த தாக்குதல் 45 நிமிடங்கள் நீடித்தது. மொத்தம் 6 குண்டுகள் வந்து விழுந்தன.
இதுகுறித்து இந்திய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கோஸ்வாமி கூறுகையில், இந்த தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதல் நடத்தவில்லை. தாக்குதலை எதிர்கொண்டு அடக்குவதற்கு வீரர்கள் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதலால் எந்த உயிர்சேதமும், பொருள் சேதமும் இல்லை. எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் வீரர்கள் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications