பல்கலை கேன்டீன் சூறை-தேமுதிக பிரமுகர் கைது
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனை கேன்டீனை சூறையாடிய தேமுதிக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவியாக இருப்பவர் கீதா. இவரது கணவர் கலியமூர்த்தி (37), தேமுதிக பிரமுகர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை நகரில் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலக ஊழியர் சிவசாமியிடம் வேலைக்காக பணம் கொடுத்தாக கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட சிவசாமியின் அண்ணன் மகன் பாண்டியன் அண்ணாமலை பல்கலைகழக மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன் நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவசாமியிடம், தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி பாண்டியனிடம், கலியமூர்த்தி கேட்டுள்ளார். அதற்கு தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி பணம் தர பாண்டியன் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கலியமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கணேசன், ராஜா, கபாலி, உள்பட சுமார் 7 பேர் பயங்கர ஆயுதங்களுடன் அண்ணாமலை பல்கலைகழகத்தில் உள்ள பாண்டியனின் கேன்டீனை திடீரென அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பாண்டியன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது ஆதரவாளர்கள் கணேசன், ராஜா, கபாலி, உள்பட சுமார் 6 பேரை தேடி வருகின்றனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications