பாகிஸ்தான் தற்கொலை தாக்குதல்-பலி 65 ஆனது
இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத் அருகே உள்ள ராணுவ குண்டு தயாரிப்பு ஆலை வளாகத்துக்கு வெளியில் நடந்த இரு தற்கொலைப் படைத் தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே, டக்ஸிலா என்ற இடத்தில் வாக் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. விமான எதிர்ப்பு குண்டுகள், பீரங்கி குண்டுகள் உள்பட ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அங்கு உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் அந்த வளாகத்துக்குள் நுழைந்த இரு தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இதில் 11 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். பலர் காயமடைந்தனர். அதிலும் பலர் உயிரிழந்துவிட்டனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 30க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications