தினகரன் சொத்து வழக்கு-தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவு

இதுதொடர்பாக தினகரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அன்னியச் செலாவணி முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் என் மீது ரூ. 28 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய அரசிடம் இந்த அபராதத்தை கட்ட வேண்டும் எனவும் எனக்கு உத்தரவிடப்பட்டது.
இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நான் அப்பீல் செய்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அடையாரில் எங்களது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்து உள்ளது. அங்கு ஒரு வீடும், காலி மனையும் உள்ளன. அதில் மூன்றில் ஒரு பகுதியை நான் வைத்துள்ளேன். மற்ற பகுதிகளில் மற்றவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சொத்தை கைப்பற்றும் வகையில், தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தைப் பிரயோகிக்க சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அப்படி உத்தரவிடுவதற்கு அவருக்கு அதிகாரம் கிடையாது. தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின் 52வது பிரிவின் படி சொத்து வரி பாக்கியை மட்டுமே இவ்வாறு வசூலிக்க முடியும். அதிலும் கூட அபராதம்தான் விதிக்க முடியும்.
எனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ. 28 கோடி மத்திய அரசுக்கு செலுத்தப்பட வேண்டியது. எனவே சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார் தினகரன்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி குலசேகரன் சொத்து மீதான தற்போதைய நிலவரமே நீடிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications