பாக்: இன்றும் தற்கொலை தாக்குதல்-20 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பகுதியில் காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கர தற்கெலைப் படைத் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
சார்பாக் என்ற இடத்தில் இன்று காலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் காவல் நிலையத்தின் மீது மோதியது. இதில் அங்கு தங்கியிருந்த ராணுவத்தினர், போலீசார் உள்பட 20 பேர் பலியாயனர்.
இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இஸ்லாமாபாத் அருகே ராணுவ குண்டு தயாரிப்பு ஆலை வளாகத்துக்கு வெளியில் இரு தினங்களுக்கு முன் நடந்த இரு தற்கொலைப் படைத் தாக்குதல்களில் 65 பேர் பலியான நிலையி்ல் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications