அதிபர் பதவி: வேட்பாளரானார் சர்தாரி- ஷெரீப் கடுப்பு

இந் நிலையில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியின் இணைத் தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவருமான அசிப் அலி சர்தாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் சர்தாரி ஒருமனதாக அதிபர் பதவி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், இதற்கு ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவு தந்து வரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீபின் ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை.
எந்தக் கட்சியையும் சாராத ஒருவரைத் தான் அதிபராக்க வேண்டும் என நவாஸ் கூறி வருகிறார். மேலும் முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும், அதன் பின்னரே அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது குறித்து பேச முடியும் என நவாஸ் நிபந்தனை போட்டுள்ளார்.
இதற்கிடையே நவாஸ் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே, பிற சிறிய கட்சிகளின் துணையோடு அதிபராகும் முயற்சிகளில் சர்தாரி ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக பல கட்சிகளுடனும் பேசி வருகிறார்.
இதனால் சர்தாரி-நவாஸ் மோதல் மீண்டும் தீவிரமாகியுள்ளது. கூட்டணியை விட்டு வெளியேறி ஆட்சியைக் கவிழ்ப்பேன் என நவாஸ் அவ்வப்போது மிரட்டி வருவது நினைவுகூறத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications