இலவச காட்ராக்ட் அறுவை சிகிச்சையால் 45 பேரின் பார்வை பாதிப்பு
சென்னை: திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட இலவச காட்ராக்ட் அறுவைச் சிகிச்சையால் 45 விவசாயத் தொழிலாளர்களின் பார்வை பறிபோயுள்ள சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தொழுவந்தாங்கல், அத்தியூர், கண்ணன்காடு, அரூர், பாக்கம், உலகுடையான்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களுக்காக கடுவனூர் கிராமத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
பெரம்பலூரைச் சேர்ந்த ஜோசப் கண் மருத்துவமனையும், இந்திய பார்வைக் குறைபாடு தடுப்புக் கழகமும் இணைந்து இதை நடத்தின.
65 வயதுக்கு மேற்பட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். இவர்களில் 45 பேருக்கு கண் புரை எனப்படும் காட்ராக்ட் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனையில் ஜூலை 29ம் தேதி அறுவைச் சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் ஆகஸ்ட் 1ம் தேதி அனைவரும் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீடு திரும்பிய சில நாட்களில் இவர்களுக்கு வாந்தியும், கடுமையான வலியும், கண் பாதிப்பும் ஏற்பட்டது. பார்வை மங்க ஆரம்பித்தது. இதையடுத்து கடுவனூர் கிராம பஞ்சாயத்து தலைவர் கருணாநிதி, ரோட்டரி கிளப்பை அணுகினார். அவர்கள் கோவை சங்கரா மருத்துவமனையிலிருந்து டாக்டர்களை வரவழைத்தனர்.
டாக்டர்கள் நடத்திய முதல் கட்டப் பரிசோதனையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தனர். அவர்களுக்கு எங்கு அறுவைச் சிகிச்சை நடந்ததோ அந்த மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து ஜோசப் கண் மருத்துவமனைக்கு அவர்களை ஊர் மக்கள் கொண்டு சென்றனர். பின்னர் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனைவரும் மாற்றப்பட்டனர். அங்கு 45 பேருக்கும் தீவிர பரி சோதனை நடத்தப்பட்டது.
அங்கு, அறுவைச் சிகிச்சைக்குள்ளான 45 பேருக்கும் அறுவைச் சிகிச்சையின்போது கெட்டுப் போன கண் சொட்டு மருந்துகள் தரப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகித்தனர். இதன் காரணமாகவே கண் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தரமான சிகிச்சை தர வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் 45 பேரையும் திருச்சியில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனைக்கு மாற்றி அங்கு தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே 8 பேருக்கு முழுமையாக பார்வை போய் விட்டதாக கூறப்படுகிறது. 21 பேருக்கு பாதி பார்வைதான் இருக்கிறதாம். மற்றவர்களுக்கும் கண் பார்வை மங்கி வருகிறதாம்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அனில் மேஷ்ராம் கூறுகையில், அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்தவுடன்தான் எத்தனை பேருக்கு பார்வை மீண்டும் வரும் என்பது தெரிய வரும்.
இந்த விவகாரம் குறித்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை டீன் பாலசுப்ரமணியன் தலைமையிலான டாக்டர் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நான்கு நாட்களுக்குள் இந்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 26ம் தேதி மாலைக்குள் அறிக்கை வந்து விடும். அதன் பின்னர் தேவைப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications