அரிசி கடத்தல்காரர்களுக்கு நூதன தண்டனை கொடுத்த கோர்ட்
மதுரை: ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு முன் ஜாமீன் வழங்கிய மதுரை உயர்நீதிமன்றக் கிளை வித்தியாசமான நிபந்தனையும் விதித்துள்ளது. மனநலம் குன்றியோர் காப்பகத்துக்கு அரிசியை தானமாக வழங்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த செல்லையா (43), சேது (45), திண்டுக்கல்லைச் சேர்ந்த டேவிட் (26), கஜேந்திரன் (50) ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த நான்கு பேரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.சுதந்திரம், அவர்களுக்கு வித்தியாசமான நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளனர். அந்த வித்தியாச நிபந்தனை இதுதான். திண்டுக்கல்லைச் சேர்ந்த இருவரும் தலா 250 கிலோ அரிசியை வெளி மார்க்கெட்டில் வாங்கி திண்டுக்கல் செல்லமந்தாடியில் உள்ள அன்பாலயா முதியோர் இல்லத்துக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
மதுரையைச் சேர்ந்த இருவரும் அதேபோல 250 அரிசியை வெளி மார்க்கெட்டில் வாங்கி, மதுரையில் உள்ள அன்பகம் மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்துக்கு கொடுக்க வேண்டும்.
இந்த அரிசி தரமான அரிசியாக இருக்க வேண்டும். அதற்கான பில்லை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் சமர்பிக்க வேண்டும். அரிசியை கொண்டு செல்லும் போக்குவரத்து செலவையும் மனுதாரர்களே ஏற்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார் நீதிபதி.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications