சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி உதயம்!

கட்சி துவக்க விழாவையொட்டி பஸ்கள், ரயில்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திருப்பதியில் குவிந்ததனர்.
திருப்பதியில் உள்ள அவிலாலா குளம் மைதானத்தில் சிரஞ்சீவி கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதற்காக அங்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மைதானத்தின் நாலாபுறமும் சிரஞ்சீவியின் மெகா சைஸ் கட் அவுட்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த் முன்னின்று கவனித்தார். மேலும் முன்னாள் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ என்.வி.பிரசாத்தும் ஏற்பாட்டுப் பணிகளில் தீவிர பங்கெடுத்தார்.
ஐந்து லட்சம் பேர் கூடுவார்கள் என சிரஞ்சீவி தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுமார் 7 லட்சம் பேர் வரை கூடிவிட்டதால் அங்கு பெரும் நெருக்கடியும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பலமுறை தடியடி நடத்தினர்.
இந்த கூட்டத்திற்காக 18 சிறப்பு ரயில்களுக்கு சிரஞ்சீவி தரப்பு ஏற்பாடு செய்திருந்தது. மேலும் திருப்பதி வழியாக வந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் சீட்கள் காலியாகிவிட்டன. ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் பெருமளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதேபோல முக்கிய பிரமுகர்களுக்காக ஏர் டெக்கான், கிங் பிஷர் விமானங்களையும் கூட சிரஞ்சீவி தரப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியால் திருப்பதியில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், லாட்ஜுகளும் நிரம்பி வழிந்தன. கல்யாண மண்டபங்களும் கூட சிரஞ்சீவி ரசிகர்களுக்காக புக் செய்யப்பட்டிருந்தன.
இதேபோல திருப்பதி திருமலை தேவஸ்தான அறைகளும் கூட பெருமளவில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தன.
பெருமளவில் கூட்டம் கூடவுள்ளதால் நக்சலைட்டுகள் தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்தில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதுதவிர சிரஞ்சீவிக்கென பிரத்யேகமாக 30 தனியார் பாதுகாப்புப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த விழாவையொட்டி திருப்பதியே கோலாகலமான மூடில் காணப்படுகிறது. நகரெங்கும் சிரஞ்சீவின் கட் அவுட்கள், பேனர்கள் உள்ளிட்டவை மின்னுகின்றன. சிரஞ்சீவியின் ரசிகர்கள் திருப்பதி நகர் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.
கட்சி தொடக்க விழாவையொட்டி நேற்றே திருப்பதிக்கு வந்து விட்டார் சிரஞ்சீவி. இன்று காலை வெங்கடாசலபதி கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்திவிட்டு மாலையில் கட்சித் தொடக்க விழாவில் பங்கேற்றார்.
அவர் பேசுகையி்ல், மக்களுக்கு சேவை செய்யவே கட்சியை தெட்கியுள்ளேன். சேவை, சேவை, சேவை.. இதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. மக்களின் ஆதரவோடு நான் அரசியலில் வெல்வேன் என்றார்.
-
மனைவி ஊருக்கு போன நேரத்தில்..வீட்டுக்கு வந்த கள்ளகாதலி! ப்ரிட்ஜில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications