தண்டவாள விரிசல்-தப்பியது பொதிகை எக்ஸ்பிரஸ்
சோழவந்தான்: சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், கொடைரோடு ரயில் நிலையத்தை கடந்து வந்து கொண்டு இருந்தது. அப்போது சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் உள்ள ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை கேட் கீப்பர் கண்டுபிடித்தார்.
இதுகுறித்து அவர் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வாடிப்பட்டியை நெருங்கிவிடவே உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி வாடிப்பட்டி ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் மதுரையில் இருந்து ரயில்வே இன்ஜினீயர்கள் விரைந்து சென்று, விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு சீரமைப்பு பணி முடிந்தது. இதையடுத்து அந்த வழியாக பொதிகை எக்ஸ்பிரஸ் கடந்து சென்றது.
இதனால் மதுரைக்கு அதிகாலை 5 மணிக்கு செல்ல வேண்டிய அந்த ரயில் காலை 6.40 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனைத்தொடர்ந்து நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 7.45 மணிக்கும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 8 மணிக்கும் தாமதமாக வந்தன. உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications