அக்.17ல் முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 21ம் தேதி வரை நடக்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பெரும் இழுபறிக்கு பின்னர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை கூட்டணியில் இடம்பெற்ற இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்து ஆதரவை வாபஸ் பெற்றன. மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து வந்த எதிர்கட்சியும் தங்களது எதிர்ப்பை அப்போது அதிகப்படுத்தின. இதையடுத்து நம்பிக்கை வாக்கெப்பை கோரினார் பிரதமர் மன்மோகன் சிங்.
இதையடுத்து கடந்த ஜூலை 21ம் தேதி கூடிய லோக்சபா சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் விவாதம் நடந்தது. அடுத்த நாள் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு தப்பியது. இதையடுத்து மறுதேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த கூட்டத் தொடர் தாமதமாகும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று கூடியது. அதில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் மாதம் 17ம் தேதி தொடங்கி, நவம்பர் 21ம் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத் தொடரின்போது அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம், என்எஸ்ஜி நாடுகளிடம் ஒப்பந்தம் சிக்கிக் கிடப்பது, பெங்களூர்-அகமதாபாத் குண்டுவெடிப்புகள், அமர்நாத் கோவில் விவகாரம், காஷ்மீர் கலவரம் ஆகியவற்றின் மீது சூடான விவாதங்கள் நடக்கலாம்.
கடந்த கூட்டத் தொடரின் தொடர்ச்சிதான் இந்த கூட்டத் தொடர். இது 14வது நாடாளுமன்றத்தின் கடைசித் தொடர் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதம் நடக்க உள்ள ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் இந்த கூட்டத் தொடர் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications