தேர்தல்-ராகுல் தலைமையில் உ.பி காங். ஆலோசனை
அலகாபாத்: உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் நாளை நடக்கிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தேர்தலை சந்திப்பது, கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது.
இதற்காக உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்பு கமிட்டிக் கூட்டம் நாளை நடக்கிறது. முக்கிய முடிவுகளை எடுக்கும் இந்த கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தலைமையில் நடக்கிறது.
முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி, போட்டியிடும் இடங்கள், வேட்பாளர்களின் பெயர்கள் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தை தொடர்ந்து பொது தேர்தலுக்கான முதல் பிரசாரத்தை உத்தர பிரதேசத்தில் இருந்தே தொடங்குகிறார். ஒரு மாநில காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்திற்கு ராகுல் தலைமை வகிப்பது இதுவே முதல் முறையாகும்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications