துபாய் தீ விபத்தில் 10 இந்தியர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

Dubai-Fire victims
துபாய்: துபாயில் நடந்த பயங்கர தீ விபத்தில் கட்டடம் இடிந்து விழுந்ததில், இந்தியாவைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த இந்தியர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

துபாயின் டெய்ரா என்ற இடத்தில் இந்த தீவிபத்து நடந்தது. இரவு முழுவதும் நடந்த மீட்புப் பணியில் 11 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

தீவிபத்து நடந்த இடம் மிகவும் பழமையான கட்டடம் ஆகும். அங்குள்ள முதல் மாடியில் தொழிலாளர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்தக் கட்டடம் அப்படியே இடிந்து விழுந்து விட்டது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

விபத்தில் கட்டடம் முழுமையாக சேதமடைந்து விட்டது. தற்போது இறந்த இந்தியர்களின் அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+