ரேஷன் கார்டை காட்டினால் 400 மூடை சிமெண்ட்
சென்னை: 1000 சதுர அடிக்கும் குறைவாக புதிய வீடு கட்டுவோர் ரேஷன் கார்டை காட்டி 400 மூடை சிமெண்ட் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் மேற்கொள்ளாத புதிய நடவடிக்கையாக 1000 சதுர அடிக்குக் குறைவாக வீடு கட்டுவோருக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகள் மூலமாக,
அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடத்தின் அடிப்படையில், ஒரு மூட்டை ரூ. 200 வீதம் சலுகை விலையில் 400 மூட்டை சிமெண்ட் மூட்டைகளை வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி சிமெண்ட் வழங்கப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து வீடு கட்டும் சாதாரண, நடுத்தர குடும்பங்களைச் ேசர்ந்த மக்கள் எளிதாகப் பயன் பெறும் வகையில், விதிகளைத் தளர்த்தி அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடத்திற்குப் பதிலாக குடும்ப அட்டையின் அடிப்படையிலேயே சிமெண்ட் பெற்று புதிய வீடுகட்டுவதற்கு 100 மூட்டை வரையிலும், பழைய வீட்டைப் பராமரிக்கும் பணிகளுக்கு 50 மூட்டையும் வழங்கிட 28.6.2008 அன்று முதல்வர் கருணாநிதி ஆணையிட்டார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகள் மூலம் சிமெண்ட் விநியோகம் செய்யும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்குடன், புதிய வீடு கட்டுவோருக்குக் குடும்ப அட்டையின் அடிப்படியைலேயே இனி 400 மூட்டை வரை சிமெண்ட் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் 4000 மூட்டை சிமெண்ட் எந்தவித இடையூறுமின்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து குடும்ப அட்டைகள் மூலமாகவே பெற்றுப் பயன் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications