பீதியை கிளப்பிய விமான கடத்தல் ஒத்திகை!
சென்னை: விமானக் கடத்தலை தடுப்பது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பழைய விமான நிலையத்தின் 12வது ரன்வே பகுதியில், நேற்று முன் தினம் இரவு 8 மணி அளவில் ஏராளமான போலீசாரும், அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பு படை டி.ஜி.பி. பட் தலைமையில் 160-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், தமிழக கமாண்டோக்கள், மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.
அந்த வழியாக விமானங்கள் இறங்குவதற்கும், புறப்பட்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. விமான நிலைய ஊழியர்கள், பணியாளர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால் விமான நிலையப் பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. என்ன நடந்ததோ என்று அனைவரும் குழம்பினர்.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜெயின், சென்னை மாநகர போலீஸ் ஆணையாளர் சேகர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தனர்.
போலீசாரும், கமாண்டோ படையினரும் ஏதோ கடத்தலை தடுக்கும் தீவிர பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த கடத்தல் தடுப்பு முயற்சி நடைபெற்றது. பிறகு இரவு 11 மணி அளவில் அதிரடிப்படையினரும், கமாண்டோ படையினரும், போலீசாரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் போன பிறகுதான் விமான கடத்தலை தடுக்கும் ஒத்திகை நடந்ததே தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பதட்டம் தணிந்தது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications