வங்கி மேலாளர் கொலை-திமுக நிர்வாகிக்கு வலை
ஸ்ரீவைகுண்டம்: தண்ணீர் வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வங்கி மேலாளர், திமுக இளைஞரணி செயலாளரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நாசரேத் அருகேயுள்ள குளத்துக்குடியிருப்பைச் சேர்ந்தவர் தயாள்சிங். இவர் சாயர்புரத்திலுள்ள பிரகாசபுரம் கூட்டுறவு வங்கி மேலாளராக பணியாற்றினார். இவரது அண்ணன் சுந்தர்ராஜன் மகன் ஹரிஸ்ரவி. நாசரேத் நகர திமுக இளைஞரணி செயலாளராக உள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி குளத்துகுடியிருப்பில் உள்ள சர்ச்சில் அசனவிருந்து நடந்தது. இதற்கு தேவையான தண்ணீரை ஹரீஸ்ரவிக்கு சொந்தமான லாரி மூலம் ஏற்பாடு செய்யாமல் வெளியிலிருந்து வேறு லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதனால் தாயள்சிங்கிற்கும், ஹரீஸ்ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஹரீஸ்ரவி தயாள்சிங்கை கொலை செய்ய திட்டமிட்டார். இந்நிலையில் தயாள்சிங் நேற்று காலை வங்கிக்கு பைக்கில் புறப்பட்டார். ஹரீஸ்ரவி தனது நண்பர் ஒருவரோடு இன்னொரு பைக்கில் அவரை பின் தொடர்ந்து சென்றார்.
குரங்கணி கோயில் பின்புறம் உள்ள சாலையில் தயாள்சிங் சென்று கொண்டிருந்தபோது ஹரீஸ்ரவி அவரது பைக்கை தயாள்சிங்கை வழிமறித்தார். அவர் சுதாரிப்பதற்குள் ஹரீஸ்ரவியும், அவருடன் வந்தவரும் அரிவாளால் தயாள்சிங்கை சராமரியாக வெட்டிவிட்டு அங்கிருந்த தப்பினர்.
இதில் படுகாயமடைந்த அவரை தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் தயாள்சிங் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஹரீஸ்ரவியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications