தேமுதிக-பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு: கணேசன்
சென்னை: தேமுதிகவுடன் பாஜகவுக்கு கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக பெண் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் இன்று சென்னையில் நடந்தது. பொதுச் செயலாளர் தமிழிசை செளந்திரராஜன், மகளிர் அணி தலைவி சுஜாதா ராவ், மகளிரணி பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர்கள் லலிதா சுபாஷ், கிரேஸி சேவியர், முனவரி பேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
அகில இந்திய பொறுப்பாளர்களான மோகினி கர்க், வினய், நிஷி கந்தா அகியோர் பயிற்சி அளித்தனர்.
இக் கூட்டத்துக்குப் பின் தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
அமர்நாத் கோவில் பிரச்சனை மத பிரச்சனை அல்ல. ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையும் அல்ல. இது பிரிவினைவாதிகளுக்கும், தேசியவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்.
சுதந்திர தினத்தன்று லால் சவுக்கில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை பிரிவினைவாதிகள் இறக்கி, தீவைத்து கொளுத்தினார்கள். இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.பிரிவினைவாதிகளுக்கு எதிராக ஒரு மாதமாக தேசிய கொடி ஏந்தி அங்குள்ள மக்கள் போராடி வருகிறார்கள். இதை மதரீதியாக சித்தரிக்கிறது காங்கிரஸ். மதவாதத்தை தூண்டிவிட்டு வாக்கு வங்கி அரசியல் நடத்தப் பார்க்கிறார்கள். காங்கிரசின் இந்த வேஷம் கிழிக்கப்படும்.
தமிழ்நாட்டில் எந்த கட்சியும், யாருடன் கூட்டணி அமைப்பது என்று இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை.
திமுக அணியுடன் பாஜக சேராது. தேமுதிகவுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வருமா என்பதையும் இப்போது சொல்ல முடியாது. போகப் போகத் தெரியும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications