வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பீகார்: மீட்புப் பணியில் முப்படைகள்
பாட்னா: வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பீகார் மாநிலத்தில் முப்படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை வெள்ளத்திற்கு 76 பேர் உயிரிழந்துள்னர். 3.5 லட்சம் பேர் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் பெரு மழையால் கோசி ஆறு வெள்ளக் காடாகியுள்ளது. இதன் காரணமாக மாதேபுரா, சுபால், அராரியா, சாஹர்ஸா ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
வெள்ளத்திற்கு இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.5 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசு அமைத்துள்ள 162 நிவாரண முகாம்களில் இதுவரை 1.12 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மாதேபுரா மாவட்டத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மிர்கஞ்ச் பகுதியில் 20பேர் இறந்தனர். இந்த மாவட்டத்தில் தான் அதிகஅளவிலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 34 பேர் இறன்துள்ளனர்
16 மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 755 கிராமங்கள் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications