பொது செயல் திட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றம்: மன்மோகன் சிங்
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பொது செயல் திட்ட வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில், நேற்று சிறு, நடுத்தர மற்றும் குறு தொழிலதிபர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளில், பொது செயல் திட்டத்தில் கூறிய பல உறுதிமொழிகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றி விட்டது.
நாடு மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கு சிறு தொழிலதிபர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தேசிய பொது செயல் திட்டத்திலும் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய அளவிலான மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் பல்வேறு நீண்ட கால பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு கண்டுள்ளது. 2020ம் ஆண்டுக்குள் 50 கோடி இளைஞர்களை நன்கு பயிற்சி பெற்ற திறமைசாலிகளாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம்.
பள்ளிகளில் வகுப்பு நேரங்களுக்குப் பின்னர் இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்கான தொழில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நான் கேட்டுக் கொள்கிறேன்.
அரசுப் பள்ளிகள், கல்லூரிள் உள்ளிட்டவற்றை இளைஞர்களுக்கான திறன் வளர்ச்சி பயிற்சிக்காக, வகுப்பு நேரங்களுக்குப் பின்னர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன் என்றார் மன்மோகன் சிங்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications