சீனாவில் பயங்கர நிலநடுக்கம் - 22 பேர் பலி
பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வட மேற்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசமாயின.
சீனாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மற்றும் யுனான் மாகாணங்களில் நேற்று மாலை 4.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவானதாக சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் 22 பேர் பலியாயினர். 126க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளன. வீடுகளை இழந்த நிலையில் பலர் சாலையில் தஞ்சம் புகுந்தனர். பல வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சிச்சுவான் மாகாணத்தில் தொலை தொடர்பு, மின்சாரம் ஆகியவை துண்டிக்கப்பட்டன. அதனால் முழுமையான சேத விவரங்கள் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. வீதியில் வாடும் மக்களுக்கு தற்காலிக டென்டுகள், போர்வைகளை அரசு வழங்கியுள்ளது.
அதேபோல வட மேற்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்திலும் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து தெரியவில்லை.
சிச்சுவான் மாகாணத்தில் கடந்த மே மாதம் தாக்கிய கடும் பூகம்பத்தில் சிக்கி 70,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications