முஷாரப் போன பின் ஆபத்து அதிகரிப்பு: நாராயணன்

தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், இதைத் தெரிவித்துள்ளார் நாராயணன். இதுகுறித்து அவர் கூறுகையில், முஷாரப் அதிபர் பதவியில் இருந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆரோக்கியமாக இருந்தன. இதனை மேலும் பலப்படுத்த, சிறந்த நிர்வாகத் திறனும், தைரியமும் தேவைப்படுகிறது.
காஷ்மீர் விவகாரம் என்பது அவ்வளவு சுலபமாக தீர்க்கக் கூடியதல்ல. பாக்.,கின் அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி, தனது முதல் முயற்சியாக இப்பிரச்னைக்கு நல்லதொரு தீர்வைக் காண்பார் என்று எதிர்பார்க்கலாம்.
பாக்.கின் ராணுவ தளபதி கியானி எல்லோராலும் பாராட்டப்படும் நபர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஐ.எஸ்.ஐ., போன்ற பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த அவரும் தவறிவிட்டார்.
கடந்த சில மாதங்களாக, ஐ.எஸ்.ஐ., அமைப்பின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளன. அல் கொய்தா பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், லஷ்கர்-இ- தொய்பா அமைப்புடன் அல் கொய்தா ஐக்கியமாகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதன் விளைவாக, இன்று பல பயங்கரவாத அமைப்புகள் உருவாகி, இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. முஷாரப் அதிபராக இருந்தபோது, சர்வதேச எல்லைப் பகுதியில் அத்துமீறல்கள் குறைவாக இருந்தன. பலமுறை அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications