மின் திருட்டு அபராதம்-நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மின் திருட்டு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை குறைக்கக் கோரிய டாக்டரின் மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் டாக்டர் செந்தில்குமார். மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 24.07.2006 அன்று செந்தில்குமாரின் மருத்துவமனையில் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மின்சாரம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மூன்று லட்சத்து 98,660 அபராதமாக விதிக்கப்பட்டது.
அபராதத் தொகையை குறைக்க கோரி, டாக்டர் செந்தில்குமார் மின் வாரிய அதிகாரிகளிடம் மனு செய்தார். அதற்கு அபராதத் தொகையில் 40 சதவீதத்தை கட்டிய பிறகு மேல் முறையீடு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ரூ.86,162 தொகைக்கு வங்கி உத்தரவாதம் அளித்தார்.
ஆனால் அந்த தொகையை அபராதமாக கணக்கிட்டு கழித்துக் கொண்டதாக அதிகாரிகள் கூறினர். இதை ரத்து செய்ய வேண்டும் என்று டாக்டர் செந்தில்குமார் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி தனது தீர்ப்பில், மனுதாரார் 24 மணி நேரம் இயங்கும் மருத்துவமனை நடத்துகிறார். அங்கு ஸ்கேன், அறுவை சிகிச்சை அரங்கு உள்ளிட்ட பல வசதிகள் இருக்கின்றன. அந்தப் பகுதியில் துணை மின் நிலையம் இருப்பதால் மின் தடை ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் மனுதாரர் மீட்டரை இயங்க விடாமல், நேரடியாக மின்சாரம் பெற்றுள்ளார். இந்த தொகையை ஒப்புக் கொண்டு அபராத தொகையை கட்டியுள்ளார். அதனால் இந்த விஷயத்தில் வாதாடுவற்கு ஒன்றுமில்லை. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினார்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications