திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகம்: அதிகாரிகள் தடை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கலையாம்பூர் கிராமத்தை சேர்ந்த சிலர் கடந்த திருவள்ளுவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தனர். அதன்படி, 4.5 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையும், தமிழன்னை சிலையும் கூடிய அழகிய கோபுரம் ஆகியவை வடிவமைக்கப்பட்டது.
கோயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் கோவில் பொது இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், இதற்கான முறையான அனுமதி அரசிடம் பெறவேண்டும். அனுமதி பெற்றே பின்பே கும்பாபிஷேகத்தை அனுமதிக்க முடியும் என்று ஆர்டிஒ ரவிச்சந்திரன், டிஎஸ்பி தங்கவேலு ஆகியோர் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விழாக்குழுவினர் போலீஸ், அதிகாரிகளின் தடையை மீறி கும்பாபிஷேகம் செய்ய முயன்றனர். அதற்கு போலீசார் மறுக்கவே, மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.
இந்த பிரச்சனையில் முதல்வர் கருணாநிதி தலையிட்டு, தீர்த்து வைக்க வேண்டும் என்று அந்த கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications