விஜய்காந்துக்கு முரசு சின்னம் கிடைக்குமா?
சென்னை: கட்சிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையம்தான் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்கிறது. இதில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என விஜய்காந்த் கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்குமா என்ற கேள்விக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பதிலளித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் முடிந்து புதிய வாக்காளர் சேர்ப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 35 லட்சம் பேர் மனு செய்துள்ளனர்.
அந்தந்த தொகுதி மையங்கள் மற்றும் வாக்குச் சாவடி அலுவலகங்கள் ஆய்வு செய்தவை, கல்லூரி மற்றும் நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டவை, எலக்ட்ரானிக் பதிவுகள் மூலம் கிடைத்தவை, பல்வேறு அரசியல் கட்சிகள் வாயிலாக சேர்க்கப்பட்டவை என்ற வகையில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் இம்மாதம் 3வது வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 6.6 கோடி மக்கள் உள்ளனர். இதில் சுமார் 65% பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்றார்.
தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்குவதில் பிரச்சனை இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டதற்கு, மத்திய தேர்தல் ஆணையம்தான் அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கு உட்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்கிறது.
குறிப்பிட்ட அளவு வாக்குகள் பெற்றிருக்க வேண்டும், 2 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் பொருந்துமானால் தேர்தல் சின்னம் வழங்கப்படும்.
இதில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றார் நரேஷ் குப்தா.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications