இந்தியாவின் வரைவறிக்கையை நிராகரிக்க ஆயுத கட்டுப்பாட்டுக் கழகம் கோரிக்கை

சமீபத்தில் வியன்னாவில் நடந்த என்.எஸ்.ஜி. கூட்டத்தில், இந்தியா கோரியபடி நிபந்தனையற்ற சலுகைகளை அளிக்க முடியாது என பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் (மொத்தம் 45 உறுப்பு நாடுகள்) கூறியதால் எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் போனது.
இதையடுத்து என்.எஸ்.ஜியில் தாக்கல் செய்யப்பட்ட வரைவறிக்கையை, இந்தியாவும், அமெரிக்காவும் ேசர்ந்து திருத்தியுள்ளன. இந்த வரைவறிக்கை என்.எஸ்.ஜி உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் என்.எஸ்.ஜி. கூட்டம் கூடுகிறது.
இதற்கிடையே, திருத்த வரைவறிக்கை குறித்தும் சில நாடுகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் திருத்தப்பட்ட அறிக்கை குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
இந்த நாடுகளும், வேறு சில நாடுகளும் இணைந்து இக்கூட்டத்தையே தள்ளிப் போட முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. திருத்த வரைவறிக்கையை படித்துப் பார்க்க கால அவகாசம் தேவை என்று அவை காரணம் கூறுகின்றன.
சீனா எதிர்ப்பு:
இந்த நிலையில் இந்தியாவுக்கு பெரும் அதிர்சத்சியாக இதுவரை இந்தியாவுக்கு எதிர்ப்பாக இல்லாவிட்டாலும் அமைதியாக இருந்து வந்த சீனா முதல் முறையாக இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளது.
அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான பீப்பிள்ஸ் டெய்லி இதுகுறித்து விமர்சித்து எழுதியுள்ளது. அணு ஆயுத ஒழிப்புக்கு இந்த ஒப்பந்தம் உலை வைப்பதாக உள்ளது என்று அது கூறியுள்ளது.
இப்படி பல்வேறு குழப்பமான சூழ்நிலையில் அமெரிக்க வெளியுறவு துணை அணைச்சர் ரிச்சர்ட் பெளச்சர், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது, இந்தியா எதிர்பார்க்கும் நிபந்தனைகளற்ற சலுகைகளைப் பெற்றுத் தருவது தொடர்பாக அமெரிக்கா முழு அளவில் முயன்று வருகிறது என்று உறுதியளித்தார்.
இந்தப் பின்னணியில் என்.எஸ்.ஜி.யில் ஒப்புதல் கிடைக்குமா என்ற கவலையில் இந்திய அரசு உள்ளது. ஒருவேளை எதிர்ப்பு வலுத்தால், என்.எஸ்.ஜி.யில் சமர்ப்பித்துள்ள வரைவறிக்கையை இந்தியா திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குண்டு போடும் ஆயுதக் கட்டுப்பாட்டுக் கழகம்
இந்த நிலையில் இந்தியாவுக்கு பெருத்த பின்னடைவாக ஆயுதக் கட்டுப்பாட்டுக் கழகம் ஒரு கோரிக்கையை என்.எஸ்.ஜி முன் வைத்துள்ளது.
இந்தியாவின் திருத்த வரைவறிக்கையை ஏற்காமல் நிராகரிக்க வேண்டும் என அது என்.எஸ்.ஜியை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அந்தக் கழகத்தின் செயல் இயக்குநர் டேரில் கிம்பல் கூறுகையில், திருத்த வரைவறிக்கையில், எந்தவிதமான சாதகமான அம்சங்களும் இல்லை. பொருத்தமான திருத்தங்களும் செய்யப்படவில்லை. அர்த்தமற்ற திருத்தங்களே இடம் பெற்றுள்ளது.
இதை திருத்த வரைவறிக்கை என்பதை விட முந்தைய அறிக்கையேயே வேறு ரூபத்தில் கொடுத்துள்ளனர் என்றுதான் கூற வேண்டும்.
திருத்த வரைவறிக்கையில், என்.எஸ்.ஜியில் பங்கேற்றுள்ள அனைத்து நாடுகளும், இந்தியா தொடர்பான நடவடிக்ைககள், ஒத்துழைப்பு குறித்து இந்தியாவிடம் முன்கூட்டியே சொல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதை ஏற்க முடியாது.
எனவே இந்த வரைவறிக்கையை அப்படியே நிராகரிக்க வேண்டும். மேலும், என்.எஸ்.ஜி. போடும் நிபந்தனைகளுக்கு ஒத்து வர வேண்டும் என இந்தியாவை வலியுறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக என்.எஸ்.ஜி.யில் இந்தியாவின் திருத்த வரைவறிக்கை ஏற்கப்படுமா என்பதில் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியா-அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதிலும் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
ஆயுதக் கட்டுப்பாட்டுக் கழகம் வரைவறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கூறுவதால், என்.எஸ்.ஜி. கூட்டம் நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. ஒன்று கூட்டம் ஒத்திவைக்கப்படலாம் அல்லது இந்தியா தனது திருத்த வரைவறிக்கையை திரும்பப் பெறலாம் என்று தெரிகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications