விடுதலைப் புலிகள் வசம் இருந்த நகர் மீட்பு: ராணுவம்

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தினசரி பல விடுதலைப் புலிகளை கொன்று குவிப்பதாக ராணுவம் கூறி வருகிறது. இருப்பினும் உண்மையான சேத நிலவரம் குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.
சமீபத்தில் விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து விமான தாக்குதலை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது தமிழர் பகுதிகளில் ராணுவம், விமானம் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் பல அப்பாவிகள் உயிரிழப்பதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குடியிருப்புகளை குறி வைத்து விமானத் தாக்குதல் நடைபெறுவதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2 நாட்களாக ராணுவம் விடுதலைப்புலிகளின் முகாம்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது.
நாச்சிகுடா பகுதியிலும் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 15 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். வவுனியாவில்இரு தரப்புக்கும் நடத்த மோதலில் 18 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த 2 நாட்களில் இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 83 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் வசம் இருந்த மல்லவி என்ற பகுதியை பிடித்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. அங்குள்ள மருத்துவமனை, முக்கிய பகுதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
அடுத்து மாங்குளம் நோக்கி முன்னேறி வருவதாகவும் ராணுவம் கூறுகிறது.
இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications