அதிமுக பொதுச் செயலர் தேர்தல்-மனு தாக்கல் தொடக்கம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை தொடங்கியது.
அதிமுக சட்ட விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் வருகிற 10ம் தேதியுடன் ஜெயலலிதாவின் பதவி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி 7ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல்செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் 10ம் தேதியன்று தேர்தல் நடத்தப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். தேர்தல் ஆணையராக அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் செயல்படவுள்ளார்.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. இத்தேர்தலில் ஜெயலலிதா மட்டுமே போட்டியிடுவார் என்பதால் அவரே போட்டியின்றி மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ளார்.
எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பின்னர் 1988ம் ஆண்டு அதிமுக உடைந்தது. இதையடுத்து தனது தலைமையில் இயங்கிய அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயலலிதா. பின்னர் இரு அதிமுகவும் ஒன்றாகி விட்டன. 88ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் 1989, 1993, 2003 ஆகிய ஆண்டுகளில் தேர்தல் நடந்து அவர் அப்பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது நான்காவது முறையாக அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications