தமிழக அரசு-டாடா இணைந்து மீனவ பயிற்சி மையம்
சென்னை: முட்டுக்காட்டில் மீனவ தொழில்நுட்ப பயிற்சி நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தமிழக அரசும், டாடா நிறுவனமும் கையெழுத்திட்டன.
மீனவர்களுக்கு மீன் பிடித்தல், மீன் வளர்த்தல், நண்டு வளர்த்தல், மீன் பதப்படுத்துதல், கடல் பாசி வளர்த்தல் மீன் உணவு தயாரித்தல் போன்றவற்றில் புதிய யுத்திகளுடன் கூடிய பயிற்சி அளிக்க நவீன மீன்பிடி தொழில்நுட்ப பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்று நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி இத்திட்டத்தை நிறைவேற்ற மீனவ தொழில்நுட்ப பயிற்சி நிலையம் (ஃபிட்) என்ற அமைப்பு கடந்த ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. மீனவ தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை அமைக்க முட்டுக்காடு கிராமத்தில் 1.16 ஹெக்டேர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
இந்த பயிற்சி நிலையத்தை அமைத்து, அங்கு செயல்படுத்தும் திட்டத்திற்கு லாப நோக்கம் இல்லாமல் தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய டாடா குழுமம் முன்வந்துள்ளது.
இதையடுத்து டாடா குழுமத்துடன் அரசுன் முழு ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது. அரசின் சார்பில் மீன்வளத் துறை செயலாளர் லீனா நாயரும், டாடா நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குனர் கிருஷ்ணகுமாரும் கையெழுத்திட்டனர்.
மீனவ தொழில்நுட்ப மற்றும் பயிற்சி நிலையத்தின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிப்பணிக்குரிய செலவுகளுக்காக முதல் கட்ட உதவி நிதியாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை ஃபிட் சங்கத்தின் கவுரவ தலைவரும், மீன் வளத்துறையின் முதன்மை செயலாளருமான லீனா நாயரிடம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
அப்போது மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, கனிமொழி எம்பி, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications