'ஹவாலா': போலி கரன்சியுடன் முதியவர் கைது
சென்னை: சென்னையிலிருந்து ஜெட்டா செல்வதற்காக வந்த 55 முதியவரிடம் ரூ. 50 லட்சம் கள்ள நோட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனத்தைச் சேர்ந்தவர் அபுல் ஹசன். இவர் நேற்று பெரிய டிராவல் பேக்குடன், சென்னை விமான நிலையம் வந்தார். சென்னையிலிருந்து ரியாத் செல்லும் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கவிருந்தார்.
அப்போது அவரது பையை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.
இந்தப் பணத்தை ஜெட்டாவில் உள்ள ஹஜ் யாத்ரீகர்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட வசதிகள் செய்துதருவதற்காக கொண்டு செல்வதாக அபுல் ஹசன் தெரிவித்தார். ஆனால் தனி நபர் ஒருவர் இந்திய மதிப்பில் 5000 ரூபாய் மட்டுமே கையில் கொண்டு செல்ல முடியும் என அதிகாரிகள் அவரிடம் கூறியபோது அதுகுறித்துத் தெரியாது என்றார் ஹசன்.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளும் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். அப்போது ஹசன் வைத்திருந்தது கள்ள நோட்டுக்கள் என்பது தெரிய வந்தது. ஹசன், ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications