வேளாங்கண்ணி திருவிழா: தஞ்சை-திருவாரூருக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழாவையொட்டி செப்டம்பர் 9ம் தேதி வரை தஞ்சை - திருவாரூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வேளாங்கண்ணி மாதா கோவிலில் அன்னை அவதரித்த திருநாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிவார்கள். இதையடுத்து தஞ்சையிலிருந்து திருவாரூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில் திருவாரூரில் மாலை 5.30 மணிக்குக் கிளம்பி தஞ்சாவூரை 6.50 மணிக்கு வந்தடையும்.
மறு மார்க்கத்தில், தஞ்சையிலிருந்து காலை 10 மணிக்குக் கிளம்பி 11.30 மணிக்கு திருவாரூரை அடையும்.
அதேபோல மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி பாசஞ்சர் ரயில் செப்டம்பர் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
