தமிழக எல்லைக்குள் கேரளம் அத்துமீறல்-வைகோ கண்டனம்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேனி மாவட்டம் கூடலூர் அருகே, வண்ணாத்திப்பாறையில் மங்களதேவி கண்ணகி கோட்டம் அமைந்துள்ளது. தமிழக எல்லைக்கு உள்ளே அமைந்துள்ள இக்கோவிலில் 1983ம் ஆண்டில் இருந்து, கேரள அரசு தொடர்ந்து தேவையற்ற எல்லைப் பிரச்னைகளை உருவாக்கி வருகிறது.
சித்திரை முழுநிலவு நாள் விழாவுக்காக தமிழகத்தில் இருந்து செல்லும் பயணிகளை, கேரள போலீசார் தடுத்து தொல்லை கொடுத்து வருகின்றனர்.
மேலும், 1986ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, தமிழக பயணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் கண்ணகி கோட்ட உரிமைக்காக மதிமுக குரல் கொடுத்துள்ளது.
இந்நிலையில், கேரள அரசின் சர்வே துறையைச் சேர்ந்த துணை ஆணையர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு தமிழக பகுதிக்குள் வந்து சர்வே செய்து அளவுகள் எடுத்த செய்திகள் வந்துள்ளன. இது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகள் அனைத்தையும் காவு கொடுத்து வரும் மைனாரிட்டி திமுக அரசின் பொறுப்பற்ற போக்கால் தான் கேரள அரசுக்கு இந்தத் துணிச்சல் ஏற்பட்டுள்ளது.
கேரள அரசிற்கு கண்டனம் தெரிவிப்பதோடு, அத்துமீறி தமிழக எல்லைக்குள் வந்த கேரள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசும், மத்திய அரசும் முன் வர வேண்டும் என்று கோருகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications