நாளை கூடுகிறது என்.எஸ்.ஜி-இந்தியாவுக்கு வெற்றி கிடைக்குமா?
வியன்னா: பரபரப்பான சூழ்நிலையில் அணு பொருள் விற்பனை அமைப்பின் (என்.எஸ்.ஜி.) 2 நாள் கூட்டம் நாளை வியன்னாவில் தொடங்குகிறது.
இந்தியாவின் அணு வர்த்தகத்திற்கு பச்சைக் கொடி காட்டுவதற்கும், இந்தியா கோரிய நிபந்தனையற்ற சலுகை குறித்து பரிசீலிக்கவும் ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் என்.எஸ்.ஜி. கூடி விவாதித்தது. அப்போது 45 உறுப்பினர்களில் பாதிப்பேர் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற சலுகை வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து என்.எஸ்.ஜி.யில் தாக்கல் செய்த வரைவறிக்கையை இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து திருத்தம் செய்தன. இந்த திருத்த வரைவறிக்கை என்.எஸ்.ஜியில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இந்த திருத்த வரைவறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தன.
மேலும், இன்னொரு அடியாக, ஆயுதக் கட்டுப்பாட்டுக் கழகம் இந்த திருத்த வரைவறிக்கையை அப்படியே நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்தியா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. என்.எஸ்.ஜியில் இந்தியாவுக்கு ஒப்புதல்கிடைக்குமா, இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறுமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், 2 நாள் என்.எஸ்.ஜி. கூட்டம் நாளை வியன்னாவில் தொடங்குகிறது. இக்கூட்டத்தில் இந்தியாவின் திருத்த வரைவறிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் இந்தியாவால் ஏற்க முடியாத அளவுக்கு நிபந்தனைகள் போடப்பட்டால், என்.எஸ்.ஜி. கூட்டத்திலிருந்து இந்தியா வெளியேறும் என இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கருத்ைத இந்தியா தெரிவித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.
இருப்பினும் எந்தவித சிக்கலுமின்றி இந்தியாவுக்கு அனுமதி கிடைக்க அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வருகிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications