'அணு கடிதம்'- பெரும் சிக்கலில் மத்திய அரசு

இந்த ரகசிய விஷயங்கள் அனைத்துமே மத்திய அரசுக்குத் தெரியும். தெரிந்தும் தான் இதில் போய் கையெழுத்திட தயாரானது என பாஜக மற்றும் இடதுசாரிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்தக் கடிதம் வெளியானவுடன் காங்கிரஸ் கட்டியின் செயற்குழு மிக அவசரமா நேற்றிரவு கூட்டப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அணு குண்டு சோதனை நடத்த இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. அதே நேரத்தில் அதற்கு அமெரிக்கா 'ரியாக்ட்' செய்யவும் ஒப்பந்தத்தில் இடமுள்ளது என்று கூறியுள்ளார்.
ரியாக்ட் என்றால் என்ன என்பதை அவர் விளக்கவில்லை என்று தெரிகிறது. அணு உலைகளுக்கான எரிபொருள் சப்ளையை அமெரிக்கா நிறுத்தும் என்பது தான் அதன் பொருள்.
இதனால் இந்தியா அணு குண்டு சோதனை நடத்த அமெரிக்க ஒப்பந்தம் தடையாக இருக்கும் என்பது தெளிவாகிறது.
அதே நேரத்தி்ல் அணு உலைக்கு எரிபொருளை அமெரிக்கா நிறுத்தினாலும், மற்ற நாடுகள் எரிபொருள் தருவதை தடுக்க மாட்டோம் என்ற உறுதிமொழி ஒப்பந்தத்தில் இருப்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். ஆனால், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தி, அமெரிக்காவுடன் சேர்ந்து மற்ற நாடுகளும் எரிபொருள் தர மறுத்துவிட்டால் என்ன ஆகும் என்பதற்கான விளக்கம் மத்திய அரசிடம் இல்லை.
'இது அமெரிக்க உள்நாட்டு விவகாரம்':
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் முடிந்த பின் மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா செய்தியாளர்களை இரவோடு இரவாக சந்தித்தார். அவர் கூறுகையில்,
பெர்மன் வெளியிட்டுள்ள கடிதம் அந் நாட்டின் ஒரு அமைப்பு இன்னொரு அமைப்புக்கு எழுதியுள்ளதாகும். இது முழுக்க முழுக்க அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரம்.
நம்மைப் பொறுத்தவரை அமெரிக்க நாடாளுமன்றத்தின் அணு ஆராய்ச்சி தொடர்பான சட்டத்தின் 123வது பிரிவின் கீழ் தான் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த ஒப்பந்தம் தான் நம்மைக் கட்டுப்படுத்தும்.
இதனால் பெர்மனின் கடிதம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்தியா செயல்படும். ஐஏஇஏவுடன் செயல்பட்ட ஒப்பந்தம், என்.எஸ்.ஜியிடமிருந்து கிடைக்கும் சலுகைகளை அடிப்படையாகக் கொண்டு நாம் செயல்படுவோம்.
அணு ஆயுத சோதனை தொடர்பான இந்தியாவின் நிலை அனைவருக்கும் தெரியும். இதுகுறித்து நாம் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறோம். 2005ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் வெளியான இந்தியா-அமெரிக்கா கூட்டறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
அமெரிக்க தூதரும் மறுப்பு:
இதேபோல அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்டும், இந்த கடிதத்தில் புதிய நிபந்தனைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்பே விவாதிக்கப்பட்ட விஷயங்கள்தான் இந்தக் கடிதத்தில் உள்ளன என்று கூறியுள்ளார்.
அணு ஒப்பந்தம் குறித்த ஆய்வு கட்டுரை:
புத்தர் சிரித்தாலும் சிரித்தார்...












Click it and Unblock the Notifications