கோவை-திருப்பி விடப்பட்ட சோனியா விமானம்
கோவை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வந்த சிறப்பு விமானம் மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டது.
ஈரோட்டில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி இன்று பிற்பகல் சிறப்பு விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.
அதன்படி 3 மணியளவில் சோனியா விமானம் கோவை வந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
தற்போது சோனியா காந்தி பெங்களூர் விமான நிலையத்திலேயே தங்கியிருக்கிறார். வானிலை சரியானவுடன் அவரது விமானம் கோவை கிளம்பிச் செல்லும் எனத் தெரிகிறது.
நாளை பிரதமர் வருகை:
இதற்கிடையே சென்னை பல்கலைக்கழக 150வது ஆண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் நாளை சென்னை வருகிறார்.
பிரதமர், சோனியா வருகையையொட்டி சேலம், ஈரோடு, சென்னை ஆகிய நகரங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோட்டில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் சோனியா காந்தி, இரவு சென்னை வந்து தங்குகிறார்.
நாளை சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் சோனியாவுக்கும், பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக 150வது ஆண்டு நிறைவு விழாவிலும் இவர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாளை காலை 10.15 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர் அவரும், சோனியா காந்தியும் சேலம் செல்கின்றனர். அங்கு சேலம் உருக்காலை விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.
சேலம் நிகழ்ச்சியை முடித்து விட்டு அங்கிருந்து இரு தலைவர்களும் டெல்லி திரும்புவார்கள்.
இதையொட்டி சென்னை, சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கு வரும் அனைவரும் தீவிர சோதனையிடப்படுகின்றனர்.
சோனியா காந்தியின் வருகையையொட்டி ஈரோடு நகரம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. அதேபோல சேலத்திலும் காங்கிரஸார் சோனியாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications