பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல் விடுத்த மர்ம பெண்
சென்னை: சென்னையில் பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள இரு பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணியில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
தொலைபேசியில் பேசிய பெண் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு வைத்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று மாணவ-மாணவிகளை வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றி மைதானத்தில் உட்கார வைத்தனர்.
பின்னர் மோப்ப நாய்களுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனையிட்டபோது குண்டு ஏதும் சிக்கவில்லை.
அதேபோல குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சமையல் அறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்ததையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அங்கும் போலீசார் சோதனை நடத்தியும் குண்டு ஏதும் சிக்கவில்லை.
இந்த இரு பள்ளிகளிலும் போலீசார் சோதனை நடத்துவதை அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து குழந்தைகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் இரு பள்ளிகளும் மூடப்பட்டன.
இதற்கிடையே பள்ளிகளில் குண்டு என்ற புரளி கிளம்பியதால் மற்ற பள்ளிகளையும் பெற்றோர் முற்றுகையிட்டு குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் பல்லாவரம், குரோம்பேட்டை, அகனாபுத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய நிலைக்கு நிர்வாகங்கள் தள்ளப்பட்டன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications