பிஎம்டபிள்யூ வழக்கு: முன்னாள் கடற்படை தளபதி பேரனுக்கு 5 ஆண்டு சிறை
டெல்லி: டெல்லியில் பிஎம்டபிள்யூ காரை தாறுமாறாக ஓட்டி சிறுவன் உள்பட 6 பேரைக் கொன்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நந்தாவின் பேரன் சஞ்சீவ் நந்தாவுக்கு டெல்லி கோர்ட் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளித்தது.
இந்த பயங்கர விபத்தில் மெஹந்தி ஹசன், குலாப், நசீர், போலீஸ்காரர்களான ரஜன் குமார், ராம்ராஜ், தேரு லால் ஆகியோர் உயிரிழந்தனர். 1999ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி இந்த விபத்து நடந்தது.
சமீபத்தில்தான் சஞ்சீவ் நந்தா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என டெல்லி கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. நேற்று இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி சஞ்சீவ் நந்தாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார். அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை.
சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் ராஜீவ் குப்தாவுக்கு ஒரு ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம், வாட்ச்மேன் போலா நாத், டிரைவர் ஷியாம் சிங் ஆகியோருக்கு தலா 6 மாத சிறை, ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications