தீர்வை நோக்கி டாடா நானோ ஆலை பிரச்சனை?

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் அமையவுள்ள டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலைக்கு தரப்பட்ட சுமார் 1,000 ஏக்கரில் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி வாங்கப்பட்ட 400 ஏக்கரை திரும்பத் தர வேண்டும் என்று கோரி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தி வருகிறார்.
இதையடு்த்து சிங்கூரை விட்டே வெளியேறுவதாக டாடா நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி இறங்கி வந்தார். இந்த விவகாரத்தில் நிலத்தை கையப்படுத்திய மாநில அரசுடன் பேச்சு நடத்தவும் முன் வந்தார்.
மம்தா-அரசு தரப்பு பேச்சு நடத்த மேற்கு வங்க ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி தான் முயற்சி எடுத்தார். நேற்று கடும் இழுபறிக்குப் பின் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இதில் மம்தா சார்பில் அவரது கட்சியின் மூத்த எம்பிக்களும், கட்சியின் விவசாய அணியினரும், அரசின் சார்பில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இன்றும் பேச்சு தொடர்ந்து கொண்டுள்ளது.
இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில் விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்கவும், அரசு தனது நிலத்தில் 44 ஏக்கரை டாடாவுக்கு வழங்கவும் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
அதே போல 400 ஏக்கரை திரும்பத் தர வேண்டும் என்று கோரிய மம்தா தரப்பு, 250 ஏக்கரை திருப்பித் தந்தால் போதும் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications