திமுகவுக்கு தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்காது: ராமதாஸ்
மதுரை: சட்டசபைக்கு தேர்தல் வந்தால் திமுகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டெல்லியைச் சேர்ந்த அமைப்புகள் நடத்திய சர்வேயில், ஊழல் அபாயகரமாக உள்ள மாநிலங்களில் காஷ்மீர், பீகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஊழல் உச்சகட்டமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகம், ராஜஸ்தான் மாநிலங்களுடன் தமிழ்நாடும் உள்ளது. போலீஸ், வனம், பத்திரபதிவு, மின்வாரியம், கல்வி, வருவாய் துறைகளில்தான் ஊழல் அதிகம். நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை ஓரம்கட்டப்படும் சூழல் மாறினால்தான் ஊழல் குறையும்.
ஊழலின் மகுடமாக மணல் கொள்ளை உள்ளது. கடந்த 2001ல் திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, காவல் துறையின் ஈரல் கெட்டுபோய்விட்டது என்று கருணாநிதி கூறினார். தற்போது அது எந்த நிலையில் உள்ளது என்பதை அவர் கூறவில்லை. போலீஸ் துறையில் அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளுங்கட்சியின் தலையீடு இருக்குக் கூடாது.
திமுக ஆட்சியில் போடப்பட்ட 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பலன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சென்னையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.
இந்த விஷயத்தில் 2 முறை அவசர சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தமிழக அரசு. உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி இருந்தால் சரவணா ஸ்டோர்ஸில் தீவிபத்து ஏற்பட்டிருக்காது. எனவே அவசர சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு யூனிட் கூட மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் முடப்பட்டுள்ளன. அனல் மின் நிலையங்களுக்கு தரமற்ற நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.
தமிழக அரசிடம் ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி வேண்டும் என்று யாரும் கோரவில்லை. இந்த அறிவிப்பால் கடத்தல்காரர்களுக்குத்தான் இரு மடங்கு பணம் கிடைக்கும்.
இன்றைய சூழலில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தால் திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. லோக்சபா தேர்தலின்போது கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications