பிரதமரை ராஜினாமா செய்ய சொல்வதா? கருணாநிதி கண்டனம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கை:
ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம்
கேள்வி: அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நம்பகத்தன்மையை பிரதமர் இழந்துவிட்டாதகவும் அவர் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் பதவி விலக வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
பதில்: பதவியில் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஏதோ ஒன்றை கூறி அவர்கள் எல்லாம் பதவி விலகிவிட வேண்டும். ஊழல்கள் பல புரிந்த இவர் பதவியிலே வந்து அமர்ந்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். தமிழகத்தில்தான் இப்படி எதற்கெடுத்தாலும் ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம் நடத்தி ஒவ்வொரு அமைச்சராக பதவி விலக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.
திண்ணை காலியாகுமா என்று தினமும் இங்கே கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர் இப்போது பிரதமர் அளவிற்கு கூச்சலிட முன்னேறியிருக்கிறார்.
இவர் தோழமை கொள்ள முயன்ற பாஜக மட்டும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரானதா? இல்லை, கம்யூனிஸ்டுகளுக்கு இந்த அறிக்கை மூலம் தூண்டில் போட முனைகிறாரா? இன்னும் ஓராண்டில் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா, பிரதமரை பதவி விலக வேண்டுமென்று அறிக்கை விடுத்துள்ளார்.
எல்லா மாநிலங்களிலும் மின்வெட்டு
கேள்வி: தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க 600 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதே?
பதில்: தமிழகத்தில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் மின்வெட்டு பிரச்சனை உள்ளது. இதனை சரிகட்டவும், சமாளிக்கவும் தினமும் அதிகாரிகளை அழைத்து விவாதிக்கிறோம். அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி அங்கேயும் முடிந்த அளவிற்கு மின்சாரத்தை பெற முயற்சிக்கிறோம்.
மக்களுக்கு மின்வெட்டு காரணமாக எந்த அளவிற்கு சிரமங்களை குறைக்க வேண்டுமோ அதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அதை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள்தான் புரிந்தும் புரியாமல் அரசை குறை கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications