அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட யு.எஸ். போகிறார் மன்மோகன்

இந்தியாவின் 34ஆண்டு கால அணு தனிமைக்கு சமீபத்தில் என்.எஸ்.ஜி. முடிவு கட்டியது. இந்தியாவுக்கு சலுகைகள் வழங்க ஒப்புதல் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறும் கட்டத்தை எட்டியுள்ளது.
புஷ் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரில் இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தரப்படும் எனத் தெரிகிறது. இதில் ஒப்புதல் கிடைத்து விட்டால், அடுத்து அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அதில் கையெழுத்திட வேண்டியதுதான் பாக்கி. அதன் பின்னர் ஒப்பந்தம் அமலுக்கு வரும்.
இதற்காக இம்மாத இறுதியில் பிரதமர் அமெரிக்கா செல்வார் எனத் தெரிகிறது. நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேசுகிறார். பின்னர் வாஷிங்டன் சென்று புஷ்ஷை சந்திக்கிறார். அப்போதே அணு சக்தி ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் செல்லும் பிரதமர், மார்ஷெல்ஸ் நகரில் நடைபெறும் இந்திய-ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் கலந்து கொள்கிறார். பின்னர் பிரெஞ்சு அதிபர் சர்கோஸியையும் சந்தித்துப் பேசுகிறார்.
ஒரு வேளை புஷ் பதவிக்காலத்திற்குள் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைக்காவிட்டால் டிசம்பர் மாதம்தான் ஒப்பந்தம் அமலுக்கு வரும். அப்படி நடந்தால் இந்தியாவின் சார்பில் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்காவின் சார்பில் கான்டலீசா ரைஸும் கையெழுத்திடுவார்கள் எனத் தெரிகிறது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications