மீனம்பாக்கத்தில் போலந்துக்காரர் கைது-கரன்சி பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் போலந்து நாட்டுக்காரர் ஒருவரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ரூ. 45 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்திற்கு போலந்து நாட்டைச் சேர்ந்த போட்ரிக் (41) என்பவர் வந்தார். அங்கிருந்து சிங்கப்பூர் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் பயணிக்கவிருந்தார்.
அவர் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர் வைத்திருந்த சூட்கேஸை சோதனையிட்டனர்.அப்போது அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் யூரோ பணம் இருந்தது தெரிய வந்தது.
இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று அவரிடம் விசாரித்தபோது முறையாக அவர் பதில் சொல்லவில்லை.
இந்திய மதிப்பில் அவற்றின் மதிப்பு ரூ. 44.80 லட்சமாகும். அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் போடரிக்கை ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
சுற்றுலா விசா மூலம் போடரிக் இந்தியா வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications