அமெரிக்கன் கல்லூரியில் தொடரும் மரத்தடி வகுப்புகள்
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்து மரத்தடியில் வகுப்புகள் நடந்து வருகின்றன. நாளுக்கு நாள் மரத்தடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக துணை முதல்வர் அன்புத்துரை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கன் கல்லூரி முதல்வராக இருந்தவர் ஜோசப் சின்னராஜ். இவர் சமீபத்தில் திடீரென பிஷப் கிறிஸ்டோபர் ஆசிரால் மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் ஜார்ஜ்செல்வக்குமார் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
இதற்கு மாணவ, மாணவியர் மற்றும் ஒரு தரப்பு ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து செல்வக்குமார் முதல்வர் பதவியேற்க வந்தபோது அவரையும், பிஷப்பையும் மாணவ, மாணவியர் கெரோ செய்தனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தினர். இதைத் தொடர்ந்து செல்வக்குமார் முதல்வராகப் பதவியேற்றார். கல்லூரிக்கும் காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது.
இருப்பினும் சின்னராஜ் ஆதரவு ஆசிரியர்கள் மரத்தடிகளில் வகுப்புகளை நடத்த தீர்மானித்தனர். அதன்படி 3 நாட்களுக்கு முன்பு மரத்தடிகளில் வகுப்புகள் தொடங்கின.
இதுகுறித்து துணை முதல்வர் அன்புத்துரை கூறுகையில், வகுப்புகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து மரத்தடிகளில் வகுப்புகளை நடத்தி வருகிறோம். நாளுக்கு நாள் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று (திங்கள்கிழமை) 700 மாணவ, மாணவியர் வந்துள்ளனர்.
10ம் தேதி முதல் முதுகலை வகுப்புகள் தொடங்கவுள்ளது என்றார்.
கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தடிகள் அனைத்தும் பள்ளி அறைகளாக மாறியுள்ளன. மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் பாடம் போதித்து வருகின்றனர். வகுப்புகளில் நிலவும் சூழல் மரத்தடிகளில் நிலவினாலும், கல்லூரிக்குள் ஒருவிதமான இறுக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications