சாலை மறியல்-அதிமுக எம்எல்ஏ சாமி கைது
மதுரை: குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ சாமி மற்றும் பொது மக்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது ஆமூர், முருகன்பட்டி, மலம்பட்டி கிராமங்கள். இந்த கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடை, பஸ் வசதி, சாலை, மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கடந்த பல வருடங்களாகவே மக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி மறியில் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக எம்எல்ஏ சாமி அறிவித்திந்தார். இதையடுத்து எம்எல்ஏ சாமியுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து அதிமுக எம்எல்ஏ சாமி தலைமையில் மேலூர், ஆமூர், முருகன்பட்டி, மலம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மேலூர் பஸ் நிலையம் அருகில் சாலை மறி்யலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முயன்றனர். இதற்கு அதிமுக எம்எல்ஏ சாமியும், பொதுமக்களும் மறுத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications