செப். 15 முதல் ரூ.1க்கு கிலோ அரிசி திட்டம்
சென்னை: தமிழக அரசின் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி, அண்ணா பிறந்த நூற்றாண்டான செப்டம்பர் 15ம் தேதியன்று தொடங்கி வைக்கிறார்.
ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் நடைபெறும் விழாவில் இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
செப்டம்பர் 16ம் தேதியன்று சென்னை நகரில் உள்ள மற்ற 13 சட்டசபைத் தொகுதிகளிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மத்திய, மாநில அமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிதியமைச்சர் அன்பழகன் தனது துறைமுகம் தொகுதியிலும், ஆற்காடு வீராசாமி அண்ணா நகரிலும், மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கிலும் திட்டத்ைத தொடங்க வைப்பார்கள்.
மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டையிலும், ஏ.ராஜா பெரம்பலூரிலும், ரகுபதி நாகப்பட்டனத்திலும், பழனிமாணிக்கம் புதுக்கோட்டையிலும், வேங்கடபதி தர்மபுரியிலும், சுப்புலட்சுமி ஜெகதீசன் கிருஷ்ணகிரியிலும் தொடங்கி வைப்பார்கள்.
இந்த திட்டத்தால் 1.86 கோடி ரேஷன்கார்டுதாரர்கள் பலன் அஏடைவர். அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 400 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், கிலோ அரிசியின் விலை ரூ. 3.50 ஆக இருந்ததை ரூ. 2 ஆக குறைத்தது. மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படும் எனவும் அறிவித்தது. தற்போது கிலோ அரிசியின் விலையை அதிரடியாக ரூ. 1 ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications